புதன், 31 ஆகஸ்ட், 2011

லியோ பக்கம் # அந்தமான் விடுகதைகள் .

விடுகதைகள்.

1. தோளில் தூக்கி சுமந்த வீட்டுடன் வீதியுலா வருவான் அவன் யார்?

2. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மடிவான்.அவன் யார்?

3. ஆட்டத்தில் கெட்டிக்காரன். பாம்பைக் கண்டால் வேட்டைக்காரன்.அவன் யார்?

4. ஆடிக்கொண்டே இருக்கும் வீடு, ஆனாலும் அச்சம் இல்லை.அது யாருடைய வீடு?

5. தண்ணீரில் விளையாடுபவன் தரயில் மூச்சை விட்டன். அவன் யார்?

6. பாடிப்பாடியே உயிர் விடுவான் பாம்புக்கு அவன் நேயர் விருப்பம். அவன் யார்?

7. போவான் வருவான் ஒற்றக்காலில் நிற்பான் அவன் யார்?

8. பச்சை பச்சை ராணிக்கு வெள்ளை வெள்ளை முத்துக்கள் அது என்ன?

9. தண்ணீரில் தள்ளாடுவான் பத்திரமாக கரை சேருவான் அவன் யார்?

10.தம்பிக்கு ஒட்டும் அண்ணனுக்கு ஒட்டாது அது என்ன?

11.கிட்ட இருக்கும் பட்டணத்தை எட்டிப் பார்க்க முடியவில்லை. அது என்ன?

12.மரம் உண்டு அடுப்பெரிக்க முடியாது. சீப்புண்டு தலைவார முடியாது.பூவுண்டு தலையில்

சூட முடியாது.அவை என்னென்ன?

13.ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர். அது என்ன?

14. காதை திருகினால் கதை சொல்வான் அவன் யார்?

15.விடிய விடிய பூந்தோட்டம் விடிஞ்சி பார்த்தா வெறுந்தோட்டம். அது என்ன?

16.பூவில் பிறக்கும் நாவில் இனிக்கும் அது என்ன?

17.ஆயிரம்பேர் சேர்ந்து கட்டின வீடு ஒரு கல் பட்டால் உடைந்து விடும்.அது என்ன?

18.ஒரு வீட்டில் ஒரு ஆயிரம் அண்ணன் தம்பிகள். அவர்கள் யார்?

19.கிணற்றில் உள்ளே போகும் போது பச்சை,வெளியே வரும் போது சிவப்பு.அது என்ன?

20.கேட்காமல் ஊசி போடுவான், காசு வாங்காமல் ஓடிப்போவான். அவன் யார்?

21.தொட்டுத் தொட்டுப் போவான் கைகள் இல்லாதவன் அவன் யார்?

22. கல்லாய் இருப்பான் கதிரவனைக் கண்டால் கரைந்து ஓடுவான் அவன் யார்?

23.பக்கத்தில் இருப்பான். படுத்தால் மறைவான் அவன் யார்?

24.கண்ணில்லாத மனிதனுக்கு காசு இல்லாத திரப்படம் அது என்ன?

25.அடுத்தவன் கட்டிய வீட்டில் இவன் வந்து குடியிருப்பான் அவன் யார்?

26.வெள்ளை நிறத்தான் வாசலில் இருப்பான் அவன் யார்?

விடைகள்

1.நத்தை

2.கடல் நீர்

3.மயில்

4.தூக்கணாங்க் குருவிக் கூடு

5.மீன்

6.தவளை

7.கதவு

8.வெண்டைக்காய்

9. படகு

10.உதடு

11.முதுகு

12.வாழைமரம்,வாழைக்காய்,வாழைப்பூ

13.இளநீர் () தேங்க்காய்

14.வானொலிப் பெட்டி.

15.வானம்

16.தேன்

17.தேன் கூடு

18 .தேனீக்கள்

19.வெற்றிலை

20.கொசு.

21.கற்று.

22.பனிக்கட்டி

23.நிழல்

24.கனவு

25.பாம்பு

26.கோலம்

கருத்துகள் இல்லை: