அரிமா சங்க இரண்டாம் ஆண்டு விழா.
நாள் : 2-12-1997
இடம் : அந்தமான் மெகாபெட் நெஸ்ட்.
நேரம் : மாலை 6.00மணி.
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்"
அந்தமானில் அரிமா சங்கம் 30-6-1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சார்டட் பிரசிடென்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அந்தமான் அரிமா சங்கதொடக்கத் தலைவர் திரு அ. மாணிக்கம் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாம் ஆண்டு அந்தமான் அரிமா சங்கத் தலைவராக திரு.கண்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தமானில் அரிமா சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மெகாபெட் நெஸ்ட் என்று அழைக்கப் படுகின்ற அந்தமான் அரசு விருந்தினர் மாளிகையில் 2-12-1997 மாலை 6.00 மணியளவில் நடை பெற்றது. அவ்வமையம் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த அரிமா மாவட்டம் 324 பி4 இன் ஆளுநர் திரு. முருகப்பன் MJF அவர்கள் ஆற்றிய உரயின் ஒரு பகுதி.
நண்பர்களே...
இந்த அரிமா சங்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
our motto is "we serve"
பிஞ்சான நெஞ்சினர்க்கும், ஏழைக்கும்
நெஞ்சார உதவுவதுதான் இந்த அரிமா சங்கத்தின் குறிக்கோள்.
அதன் காரணமாகத்தான் ஏழை எளிய மக்களின் அஞ்சுதலைத் தீர்த்து வைத்து ஆறுதலைத் தந்தருளும் அரிமாக்களின் அளப்பரிய பணிகள் இந்த அகிலமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த இயக்கத்திலே தொண்டும் தோழமையும் இரண்டு கண்களாகக் கொண்டு இந்த அரிமா சங்கங்களும் அரிமாக்களும் பாடுபட்டு வருகிறார்கள். இந்த சங்கங்கள் ஆற்றுகின்ற பணிகளிலேயே ஒரு மனிதனை தெய்வமாக்கக் கூடிய அளவிற்கு அவர்களுடைய பணி அதை பெறுகின்றவர்களிடையே உள்ளத்திலே பதிகின்றது. மனிதனை தெய்வமாக முடியுமா என்றால் முடியும் என்கிறார் ஒரு கவிஞர்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் காட்டிற்குள்ளே மலையைக்காணலாம்
துணிவிருந்தால் தலைவனென்ற சுமையை சுமக்கலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
இதைத்தான் பெரியவர்கள் “தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.
தொண்டு என்று பார்க்கும் போது இந்த போர்ட்பிளேயர் அரிமாசங்கம் இந்த ஆண்டு மிகுதியான ப்ராஜெக்ட்களை செய்திருக்கிறார்கள். போர்ட்பிளேயர் நகரில் பல பேருந்து பயணியர் நிழற்குடைகள் மிகச்சிறந்த முறையிலே அமைக்கப்பட்டு அவை பொது மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகின்றன. அதனால்தான் எமக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களை நம்முடைய அரிமா மாவட்ட செய்தித்தாளிலே அந்த புகைப்படத்தை இடம் பெறச்செய்தேன். அந்த அளவிற்குஅது ஒரு சிறப்பான நிழற்குடையாக அமைந்து இருக்கின்றது. இந்த ஆண்டு நமது சங்கத்தைச் சேர்ந்த அரிமா. கண்ணன் அவர்கள் இந்த பேருந்து பயணியர் நிழற்குடைகளுக்கான மாவட்டத் தலைவர் என்ற காரணத்தாலே போட்டி போட்டுகோண்டு ஆற் பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைப்பதாக கேள்விப்பட்டபோது மிகவும் மகிழிசியடைந்தேன். இந்தப்போட்டி நீடூழி வாழட்டும் என்று வாழ்த்துகிறேன். தோழமை என்று பார்க்கும் போது மற்ற மாவட்ட அரிமாக்கள் உங்கள் சங்கத்தைப்பற்றி அவர்கள் எங்களிடத்தில் தொலை பேசியில் கூறும்போதும் அவர்களை நான் சந்திக்கும் போதும் அவர்கள் நிறைவேற்றும் கடமைகளைப் படிக்கும் போதும் எனக்குள் ஏற்படுகின்ற ஆனந்தங்கள் அலாதியானது.
I am proud to be a Lion என்று அடிக்கடி சொல்வார்கள். அதனுடைய உண்மையான அர்த்தம் உங்களைப் பற்றி மற்றவர்கள் எங்களிடத்திலே கூறுவது. இந்த சங்க எங்கள் மாவட்டத்திலே இருக்கிறது என்ற வகையிலே நாங்கள் மிக மிக மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் சொல்வது மட்டுமல்ல இன்று நாங்களே உணர்ந்தோம். இன்று காலையிலிருந்து இந்த நேரம் வரை எங்களைவிட்டு பிரியாது அன்பு காட்டி அளவளாவியது எங்கள் நெஞ்சை நெகிழச்செய்கிறது. கடல் கடந்து மொழி பேசத்தெரியாத நாடு என்ற எங்களின் நினைப்பை இது தமிழ்நாடுதான் என்று எண்ண வைத்தது. அந்த அளவிற்கு தோழமையோடு அனைத்து அரிமாக்களுமே அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்று நாங்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது அத்தனை 43 அரிமாக்களுமே விமான நிலையத்திற்கு வந்து எங்களை வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அரிமா மகளிரும் கூடி நின்று வரவேற்றது இங்கே நான் முதலிலே கூறியதைப் போல அரிமா குடும்பம் ஒரு குடும்பமாக காட்சி அளித்ததை நான் என்றும் மறவேன். இந்த சங்கத்தின் சேவைகளை நான் மனமாற பாராட்டுகிறேன். இந்த சிறப்பான நாளிலே இந்த நிகழ்சியிலே பங்கேற்றதில் மழ்ச்சியடந்து எனது உரையை முடிப்பதற்கு முன்புகாக சில அரிமா பொத்தான்களையும் நமது மாவட்ட சான்றிதழ்களையும் அளிப்பதிலே நான் பெருமை அடைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக