மங்கையர் தினம்
இடம்: பத்துபஸ்த்தி பள்ளி வளாகம்
போர்ட்பிளேயர் அரிமா சங்கம் உலக மங்கையைர் தின நிகழ்ச்சியை பத்துபஸ்த்தி பள்ளியில் நலிந்த பெண்களுக்கு சேலை வழங்கும் விழாவாக அடத்தியது. அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத் தலவர் அரிமா.முத்து எம்.ஜே.எப். அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக துணை கமிசனைர்.திரு. மாத்தூர் (Shri. Maaththur. IAS dy. commissioner Andaman Nicobar Islands.)அவர்கள் கலந்து கொண்டார்.
பாத்து பஸ்த்தி பஞ்சாயத்துத் தலைவர் திரு வெ.வெள்ளைக்கண்ணு அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதன் ஒரு பகுதி வருமாறு
“ இன்றைய தினம் உலக மங்கையைர் தினம். இந்த தினத்தை எனது கிராம பஞ்சாயத்துப் பகுதியிலே குறிப்பாக இந்தப் பள்ளி வளாகத்திலே ஏழை எளிய மங்கையர்களுக்கும் எளிய தாய்மார்களுக்கும் இன்று சேலைகள் இலவசமாக் கொடுத்து அவர்களைப் பாது காக்கும் வகையிலே முற்ச்சியெடுத்து வருகின்ற அரிமா சங்கத்தலைமைக்கு என் சார்பிலும் எனது பஞ்சாயத்தினர் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா சங்கம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் தீவு முழுவதிலும் பல் வேறு நர்பணிகளைச் செய்து வருகிறது. போர்ட்பிளேயர் நகரில் பேருந்து பயணியர் நிழற்குடைகள் இல்லாத எல்லா இடங்களிலும் பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைத்தும், ஏழை எளிய மக்களுக்கு வண்டி வாகனங்கள் கொடுத்தும், பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கண்ணொளி வழங்கும் வகையில் கண்ணாடிகள் வழங்கியும் பல்வேறு நால்ல சேவைகளை செய்து வருகிறது.
அதுபோல் எங்கள் கிராம மக்களும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இங்கு வந்திருக்கின்ற அரிமா சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அரிமாசங்கத் தலைவர் அரிமா.முத்து எம்.ஜே.எப். அவர்கள் என்னை அணுகி ஏழை எளிய மக்களுக்கு சேலை வழ்ங்கும் திட்டத்தைக் கூறி உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளிய மங்கையர்களுள் 23 பேர்களின் பெயர்களை எழுதித்தருமாறு கூறினார். அதன்படி 23 மிகவும் பின்தங்கிய ஏழை எளிய தாய்மார்களின்பெயர்களை தேர்ந்தெடுத்து எழுதிக் கொடுத்துள்ளேன். இது போல இன்னும் பல தாய்மார்களுக்கும் அரிமா சங்கம் மேலும் பலப்பல உதவிகள் செய்யும் திட்டங்களை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அரிமாசங்கம் மேன்மேலும் வளர்ந்து நலிவடைந்த மக்களுக்கு நல்லாதரவு தந்து, வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.
அடுத்ததாக டாக்டர்.மைக்கேல்ராஜ் CARI அவர்கள் பேசினார். அவர் பேசியதாவது.
அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத் தலவர் அரிமா.முத்து சேட் எம்.ஜே.எப். அவர்களே! சேலை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் அந்தமான் மாவட்ட துணை கமிசனைர்.திரு. மாத்தூர் அவர்களே! பாத்து பஸ்த்தி பஞ்சாயத்துத் தலைவர் திரு வெ.வெள்ளைக்கண்ணு அவர்களே! அரிமா சங்க உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாங்கள் அரசு இயக்கமான Central agricultural Research Institute மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நவீன விவசாய தொழில் நுட்பங்கள் மற்றும் உதவிகள் செய்து வருகிறோம். ‘Kendriya Krishya Santhan Anusanthaan’ மூலமாக இரண்டு சமூகப் பணிகளைச் செய்துள்ளோம்.
1. மங்குள்ட்டான் கிராமத்தில் மகளிர் சங்கம் அமைத்து உள்ளோம். அங்கு இரண்டு தையல் எந்திரங்கள் வழங்கியுள்ளோம்.
2. மாண்பு மிகு. அந்தமான் துணை ஆளுநர் அவர்கள் மூலம் மான்பூர் கிராமத்திற்கும் இரண்டு தையல் எந்திரங்கள் கொடுத்துள்ளோம். மேலும் எழை மாணவர்க்ளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பேனா போன்றவைகள் கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் CARI என்று அழைக்கக் கூடிய Central agricultural Research Institute சார்பாக அரசு மூலம் நாங்கள் தருகிறோம்.
ஆனால் அரிமா சங்கம் ஆற்றியிருக்கிற பணி மகத்தானது. பேருந்து நிழற்குடைகள், நெருப்பினால் ஏற்பட்ட சேதமடைந்த மக்களுக்கான உதவிகள், காலிக்காட் கிராமத்தில் பல கண்பார்வையற்றவர்களுக்கு கண்ணொளி நல்கிய சேவை, இன்று சேலை வழங்கும் நிகழ்ச்சி இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரிமா சங்கத்தின்பணி வியப்படைய வைக்கும் பணியாகும். இத்தகைய அரிமா சங்கத்தின் சமுதாயப் பணிகள் மேன் மேலும் வளர்ந்து செழிப்படைய வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக துணைக் கமிசனர் திரு.மாத்தூர் அவர்கள் பேசினார். அவர் பேசியதாவது.
அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத் தலவர் அரிமா.முத்து சேட் எம்.ஜே.எப். அவர்களே! பொருளாளர் ராஜசேகர் அவர்களே! பாத்து பஸ்த்தி பஞ்சாயத்துத் தலைவர் திரு வெ.வெள்ளைக்கண்ணு அவர்களே! அரிமா சங்க உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
உலக மகளிர் தின வாரமாக உலகம் முழுதும் இந்த வாரம் கொண்டாடி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று இந்தப் பள்ளி வளாகத்தில் அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத்தின் சார்பாக பெண்களுக்கு சேலை வழங்கி கெளரவப்படுதும் அரிமாக்களின் பணியை மனமார வாழ்த்துகிறேன்.
இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னும் அநீதி இழைக்கப்படுகின்றது. பெண்களுக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று பேசினாலும் அத்துணை அளவு மதிப்பும் மரியாதையும் இன்றும் பெண்களுக்கு கிடைக்கவில்லை. ஆணாதிக்கம். ஆம், ஆணாதிக்க சமுதாயமாகத்தன் இன்றும் இந்த பூமி உள்ளது. ஆண்களாகிய நாம்தான் இதை உணர்ந்து திருந்த வேண்டும். நம்மை பெற்றவள் ஒரு பெண், நம்மோடு வாழ்பவள் ஒரு பெண் என்பதை உணர்ந்து இந்த நன்னாளில் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். அதன்படி செயலாற்ற வேண்டும்.